தேனி மேம்பால பகுதியில் சர்வீஸ் ரோடு பணி தீவிரம்
தேனி : தேனியில் மேம்பாலம் அமையும் பகுதியில் சர்வீஸ் ரோடு அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தேனி அரண்மனைப்புதுார் விலக்கு பகுதியில் 2 ஆண்டுகளுக்கு முன் ரயில்வே மேம்பால பணிகள் துவங்கின.
தற்போது அரண்மனைப்புதுார் விலக்கு பகுதியில் மேம்பாலத்திற்கான பெரும்பாலான பணிகள் நிறைவடைந்துள்ளன.
தற்போது வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. மற்றொரு புறம் பாதி துாரத்திற்கு மட்டும் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டது.
தற்போது அந்த சர்வீஸ் ரோடு அமைக்கும் பணியை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் துவங்கி உள்ளனர்.
சர்வீஸ் ரோடு 5.5 மீட்டர் அகலத்தில் அமைக்கப்படுகிறது. இந்த ரோடு ராஜவாய்க்காலை ஒட்டி அமைக்கப்படுகிறது.
இதுபற்றி தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ரம்யா கூறுகையில், ‘போக்குவரத்து மாற்றம் செய்தால் சர்வீஸ் ரோடு அவசியம் என்பதால் பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளன. ராஜவாய்க்காலுக்கு இடையூறு இன்றி ரோடு அமைக்கப்படுகிறது,’ என்றார்.