திறனாய்வு தேர்வு எழுதும் 1713 பள்ளி மாணவர்கள்
தேனி : ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளிகளில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசால் ஊரக திறனாய்வுத் தேர்வு(டிரஸ்ட் தேர்வு) நடத்தப்படுகிறது. இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.ஆயிரம் வீதம் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. இத்தேர்வு டிச.,14ல் நடக்கிறது.
தேர்வின் மூலம் தலா 50 மாணவர்கள், மாணவிகள் உதவித்தொகை பெற தேர்வு செய்யப்படுவார்கள்.
மாவட்டத்தில் உள்ள 102 அரசுப்பள்ளிகளில் இருந்து 1713 மாணவர்கள் தேர்விற்கு விண்ணப்பித்துள்ளனர். மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், மயிலாடும்பாறை, போடி ஆகிய இடங்களில் தலா ஒரு மையத்திலும், ஆண்டிபட்டி, உத்தமபாளையத்தில் இரு மையங்களிலும் தேர்வு நடக்க உள்ளது.