நகராட்சி அலுவலகம் முன் ஓய்வூதியர்கள் தர்ணா
தேனி : பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும், 70 வயது நிறைந்தஓய்வூதியர்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன் அனைத்து ஓய்வூதியர் கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.
கூட்டமைப்பு மாவட்ட தலைவர் ஆண்டவர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, ஓய்வு பெற்ற பள்ளி,கல்லுாரி ஆசிரியர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் பாலுச்சாமி முன்னிலைவகித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்ட செயலாளர் ராமசந்திரன், நிர்வாகிகள் துரைராஜ், பெருமாள்சாமி, மாரிச்சாமி, முருகேசன், ராஜாமணி, அமுதன், பாலையா, கனகராஜன் உள்ளிட்டோர் தர்ணாவில் பங்கேற்றனர்.