Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடத்த வேண்டும் குறைதீர் கூட்டத்தில் ஆசிரியர்கள் மனு

தேனி: கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 232 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.

கலெக்டர் ஷஜீவனா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதாஹனீப், கலெக்டர் நேர்முக உதவியாளர் முத்துமாதவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பெரியகுளம் வடகரை ராஜ்குமார் தலைமையில் வந்தவர்கள் வழங்கிய மனுவில், அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி, வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களை தேர்வு செய்ய கடந்த பிப்.,ல் தேர்வு நடத்தப்பட்டது. அதில் நாங்கள் தேர்ச்சி பெற்றோம்

ஆனால், இதுவரை கலந்தாய்வு நடத்தவில்லை. அதே நேரம் ஆதிதிராவிடர்பள்ளிகளுக்கு தேர்வாகிய ஆசிரியர்கள் பணியில் சேர்ந்து விட்டனர்.

கலந்தாய்வினை நடத்த பள்ளிக்கல்வித்துறைக்கு பரிந்துரை செய்ய கோரினர்.

சின்னமனுார் ராஜா ரைஸ் மில் தெரு சின்னத்தம்பி கோரிக்கை அடங்கிய பதாகையை கழுத்தில் தொங்கவிட்டாரு மனுஅளிக்க வந்தார்.

அவர் மனுவில்,’சின்னமனுாரில் செயல்படும் பால் வியாபாரிகள் சங்கத்தில் உறுப்பினர் சந்தா தொகை செலுத்திவந்தேன்.

மேலும் சங்கத்தின் மூலம் வங்கியில் நவரத்தின மாலா, சஞ்சீவி திட்டத்தில் எனது பெயரில் பணம் செலுத்தப்பட்டது. அதனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். என கோரினார்.

பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் அம்பேத்கர் பற்றி பேசியதாக மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மூன்று சக்கர சைக்கிள், ஊன்றுகோல் என மொத்தம் 9 பயனாளிகளுக்கு ரூ.59,552 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *