ஷோரூமில் பொருட்கள் திருடிய மூவர் மீது வழக்கு
தேனி : பெரியகுளம் ரிலையன்ஸ் ஷோரூமில் ஆடையில் மறைத்து பொருட்களை திருட்டிய 2 பெண்கள், ஒரு ஆண் உட்பட மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரியகுளம் – வத்தலக்குண்டு ரோட்டில் ரிலையன்ஸ் ஸ்மார்ட் பாயிண்ட் ஷோரூம் கிளை மேலாளர் முகமது ஆரிப் 26. இவர் மாத இறுதியில் ஷோரூமில் உள்ள பொருட்களின் இருப்புகளை தணிக்கை செய்தார். நவ.26ல்கடை இருப்புக்கும், பதிவேட்டில் உள்ள இருப்பு விபரங்களுக்கும் வித்தியாசம் தெரிந்தது. இதனால் கடையில் உள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை கண்காணித்தார். அதில்60, 50 வயதுள்ள 2 பெண்கள், 30 வயதுள்ள ஆண் என மூவரும் பில் போடாமல் பலசரக்கு பொருட்களை மறைத்து எடுத்துச் சென்றது தெரிந்தது.
மேலும் கேமராக்களை பார்வையிட்டபோது நவ.11, 12, 18 ஆகிய மூன்று நாட்களில் ஆடையில் மறைத்து ரூ.74 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்றது தெரிந்தது. கிளை மேலாளர் புகாரில் பெரியகுளம் எஸ்.ஐ., விக்னேஷ், கேமரா பதிவுகளை கொண்டு திருடிய மூவர் மீது வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.