மழைக்கால காய்ச்சல் தடுப்பு முகாம் சுருளிப்பட்டியில்
கம்பம் : சுருளிப் பட்டி அரசு கள்ளர் துவக்கப் பள்ளியில் மழைக்கால சித்த மருத்துவ முகாம் மற்றும் காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு பள்ளி தலைமையாசிரியை மேகலா தலைமை வகித்தார். பள்ளி நலக்குழு டாக்டர் ஹரிணிகா முன்னிலை வகித்தார். மருந்தாளுனர் பசும்பொன் வரவேற்றார். இந்த முகாமில் பள்ளி மாணவர்களுக்கு கபசுர குடிநீர் பாக்கெட்டுகள் , நிலவேம்பு கசாய பொடி, கற்றல் குறைபாட்டினை போக்கும் வல்லாரை மாத்திரைகள் வழங்கப்பட்டது.
ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கும் நிலவேம்பு கசாய பொடி பாக்கெட்டுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நர்சுகள் காஞ்சனா, ஜமுனா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.