போடி மாணவர்கள் முதலிடம் தேசிய சிலம்ப போட்டி
போடி : தேசிய அளவிலான சிலம்பப் போட்டி கோவை எஸ்.என்.எஸ்., கல்லூரியில் நடந்தது.
50க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டனர். இதில் போடி ஆதி போகர் சிலம்ப பயிற்சி கூடம் சார்பில் 44 மாணவர்கள் கலந்து கொண்டனர். சிலம்பம், வாள்வீச்சு, சுருள்வால், மான் கொம்பு, வேல்கம்பு உள்ளிட்ட போட்டிகளில் ஆதி போகர் சிலம்ப பயிற்சி கூட மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை படைத்து உள்ளனர். இதில் 64 தங்கம், 3 வெள்ளி பதக்கம் பெற்று உள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்கள், மாஸ்டர் காளிதாஸ்யை பெற்றோர்கள் பாராட்டினர்.