4 கிலோ கஞ்சா பறிமுதல் கேரளாவிற்கு கடத்த முயன்ற தம்பதி உட்பட 3 பேர் கைது
கம்பம், டிச. 6: கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்தவுள்ளதாக கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் போலீசார் கம்பம் பகுதியில் ரோந்து மேற்கொண்டனர். அப்போது கம்பம் நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே 1 பெண் உட்பட 2 பேர் சந்தேகப்படும் படியாக நின்றிருந்தவர்களை பிடித்த போலீசார் அவர்கள் வைத்திருந்த போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது பையில் 4 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சிங்கராஜபுரத்தைச் சேர்ந்த ராமர்(41), குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார்(45) அவரது மனைவி மகேஸ்வரி(39) ஆகியோர் என்பதும் இவர்கள் கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராமர், செந்தில்குமார், மகேஸ்வரி ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.