முதல்வர் மருந்தகங்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
தேனி, டிச. 6: தேனி மாவட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் அமைப்பதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் 15.08.2024 சுதந்திர தினவிழா உரையில், ‘‘பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும்’’ என அறிவித்தார்கள்.
முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள B.pharm/ D.pharm சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள தொழில்முனைவோர் 05.12.2024 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என 01.12.2024 தேதி நாளிதழ்களில் அறிவித்திருந்த நிலையில் தற்போது பொதுமக்கள் நலன் கருதி 10.12.2024 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைவரும் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.