ரயில்வே ஸ்டேஷன் பஸ்ஸ்டாண்டில் சோதனை
தேனி: அயோத்தியில் 1992 டிச.6ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. ஆண்டுதோறும் இந்த நாளில் நாடுமுழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்படும்.
தேனியில் பென்னி குவிக்பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் பகுதிகளில் வெடிகுண்டு செயலிழப்பு தடுப்புப்பிரிவு போலீசார் ரோந்து, ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.
சிறப்பு எஸ்.ஐ.,க்கள் சந்திரசேகரன், மீனாட்சிசுந்தரம், திருப்பதிகிரிவாசகன் ஆகியோர் மெட்டல் டிடெக்டர் மூலமும், ஆயுதப்படை போலீஸ்காரர் கதிர்காமசொக்கலிங்கம் மோப்ப நாய் வீராவுடன் ரயில் பயணிகளின் உடமைகள், பஸ்களில் பயணிகளின் உடமைகள் ஆய்வு மேற்கொண்டனர்.