ரோஸி வித்யாலயா பள்ளி தேர்வு: வினாடி வினா மண்டல போட்டிக்கு
தேனி: தேனி கோட்ட தபால்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்காக நடந்த வினாடி வினா போட்டியில் லட்சுமிபுரம் ரோஸி வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளி வெற்றி பெற்று, மண்டல போட்டிக்கு தகுதி பெற்றது.தமிழக தபால்துறையில் 2025 ஜன.25 முதல் பிப். 2 வரை சென்னையில் தபால் தலை கண்காட்சி நடக்க உள்ளது. இதன் ஒரு பகுதியாக மெகா’ வினாடி வினா போட்டி 2025 பிப்.2ல் நடக்க உள்ளது. இப்போட்டியில் பங்கேற்பதற்கான கோட்ட அளவிலான வினாடி வினா போட்டி தேனி கோட்டத்தில் டிச.3ல் நடந்தது. கண்காணிப்பாளர் குமரன் தலைமை வகித்து போட்டிகளை துவக்கி வைத்தார். பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில் தேனி லட்சுமிபுரம் ரோஸி வித்யாலயா சி.பி.எஸ்.சி., பள்ளி மாணவியர் முதலிடம் பெற்று, மண்டல போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர்.
வெற்றி பெற்ற, பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு தபால் துறை சார்பில் சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை உதவி கோட்ட கண்காணிப்பாளர் ராஜேஷ்குமார், ஊழியர்கள் செய்திருந்தனர்.