கர்ப்பத்தால் தற்கொலைக்கு முயன்ற பள்ளி மாணவி: காதலன் மீது போக்சோ
தேனி : தேனி அருகே பள்ளி மாணவி கர்ப்பத்தை மறைக்க தற்கொலைக்கு முயன்றார். கர்ப்பமாக்கிய காதலன் மதன்குமார் 21, மீது போக்சோ வழக்கு பதிந்து மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.
தேனி பகுதி கிராமத்தை சேர்ந்த பிளஸ் 1 மாணவியை 7 ம் வகுப்பு படிக்கும் போது, அதே கிராமத்தை சேர்ந்த மதன்குமாரை காதலித்தார். மாணவியின் பெற்றோர் வாலிபர் மீது போலீசில் புகார் அளித்ததால், மாணவியை வாலிபர் சந்திக்காமல் இருந்தார். கடந்தாண்டு மாணவி பிளஸ் 1 படித்தார். மாணவியை சந்தித்து, காதலிப்பதாக மதன்குமார் கூறினார். மறுத்தால் காதலிக்கும் போது எடுத்த புகைப்படங்களை பெற்றோருக்கு அனுப்புவதாக மிரட்டினார். இதனால் மாணவி வாலிபருடன் பேசினார். மாணவியை தனியாக அழைத்து சென்று மிரட்டி பலாத்காரம் செய்தார். கர்ப்பமடைந்த மாணவி, அதனை வீட்டில் சொல்லாமல் மறைத்தார்.
உடலில் மாற்றங்கள் தெரிந்ததை பற்றி தாய் கேட்ட போது, உண்மையை மாணவி கூறினார். அதனால் தாய் திட்டனார். தந்தையிடம் கூறிவிடுவாரோ என்ற பயத்தில் வீட்டில் திரவத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்த போது பரிசோதனையில் மாணவி கர்ப்பமாக இருந்தது தெரிந்தது. மாணவி புகாரில் தேனி அனைத்து மகளிர் போலீசார் காதலன் மதன்குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.