பனிப்பொழிவு அதிகரிப்பால் வாகன ஓட்டிகள் சிரமம்
போடி: போடி – மூணாறு, நெடுங்கண்டம் செல்லும் போடிமெட்டு மெயின் ரோட்டில் பனிப்பொழிவு அதிகரிப்பால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
தென்னகத்து காஷ்மீர் என அழைக்கப்படும் மூணாறு செல்லும் தமிழக கேரளாவை இணைக்கும் வழித்தடத்தில் அமைந்து உள்ளது போடிமெட்டு. இந்த மலைப்பகுதி கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4,644 அடி உயரத்தில் அமைந்துள்ளது. குரங்கணி, டாப் ஸ்டேஷன், கேரளா பகுதியான பூப்பாறை, நெடுங்கண்டம், புளியமலை, பாம்பாடும்பாறை உள்ளிட்ட பகுதியில் சாரல் மழை, பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது. மாலை 5:00 மணிக்கு மேல் துவங்கப்படும் பனிப்பொழிவு மறுநாள் காலை 10:00 மணி வரை உள்ளது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத நிலையில் உள்ளது. பலர் முகப்பு விளக்கு போடாமல் ஓட்டி வருவதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். வீசி வரும் குளிர்ந்த காற்றால் ஏலப் பழங்களை பறிப்பதில் தோட்ட தொழிலாளர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். பனிப்பொழிவு காண சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகை தருகின்றனர்.