Sunday, June 8, 2025
மாவட்ட செய்திகள்

போக்குவரத்து ஓய்வூதியர்கள் ஆலோசனை கூட்டம்

தேனி: 109 மாத டி.ஏ., நிலுவைத் தொகையை வழங்க உத்தரவிட்ட நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த கோரியும், 20 மாதமாக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பண பலன் வழங்க கோரியும் சென்னையில் வரும் டிசம்பர் 17 ம் தேதி, அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இதுகுறித்து ஆலோசனை கூட்டம், வீரபாண்டியில் இன்று(டிச.,8) நடந்தது. போராட்டத்தில் அனைவரும் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தேனி மாவட்ட தலைவர் பாண்டி, சென்னையில் நடந்த சிறப்பு ஆலோசனை கூட்டத்தில் விவாதித்த விஷயங்கள் குறித்து, கூட்டத்தில் விளக்கி, சிறப்புரையாற்றினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *