Wednesday, April 16, 2025
மாவட்ட செய்திகள்

ஆடி பவுர்ணமி: கோயில்களில் திரளாக குவிந்த பக்தர்கள்

ஆடி பவுர்ணமியை முன்னிட்டு சிவன் கோயில்களில் பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் பெற்றுச் சென்றனர்.

தேனி: தேனி பெத்தாட்சி விநாயகர் கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. பங்களாமேடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், என்.ஆர்.டி., நகர் சிவ கணேச கந்த பெருமாள் கோயில், வீரபாண்டி கண்ணீஸ்வர முடையார் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பெரியகுளம்: பெரியகுளம் அருகே கைலாசபட்டி கைலாசநாதர் கோயிலில் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு கைலாசநாதர், பெரியநாயகி அம்மன், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் ராஜேந்திரசோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி அம்மன், பாலசுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை நடந்தது. ஞானாம்பிகை காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் சிவனுக்கும், ஞானாம்பிகை அம்மன், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. பெரியகுளம் அருகே ஈச்சமலை மகாலட்சுமி கோயிலில் யாககுண்டம் அமைக்கப்பட்டு பூஜைகள் நடந்தது.

சிவன், நந்தீஸ்வரர், ஸ்ரீ சக்கரம், 18 சித்தர்களுக்கும் பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை டாக்டர் மகா ஸ்ரீ ராஜன் செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *