போட்டி போட்டி வாங்கிய மக்கள் தக்காளியை
மூணாறு: மூணாறில், பழநியில் இருந்து கொண்டு வரப்பட்டு விலை குறைவாக விற்கப்பட்ட தக்காளியை மக்கள் போட்டி போட்டு வாங்கினர்.
மூணாறுக்கு தேவையான காய்கறிகள் தமிழகத்தில் ஆண்பட்டி, மதுரை, உடுமலைபேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டு விற்கப்படுகிறது. சபரிமலை சீசன் துவங்கியதையடுத்து காய்கறிகளின் விலை அதிகரித்தது. குறிப்பாக நேற்று வரை காய்கறி மார்க்கெட்டில் தக்காளி கிலோ ஒன்று ரூ.70, 80 என நோக்கம் போல் விற்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் பழநியில் இருந்து மினி லாரியில் கொண்டு வரப்பட்ட தக்காளி நேற்று கிலோ ஒன்று ரூ.40 என்ற ரீதியில் இரண்டரை கிலோ ரூ.100க்கு விற்கப்பட்டது. விலை குறைவாக விற்கப்பட்டதால் மக்கள் அள்ளி சென்றனர்.