வருமானவரி விழிப்புணர்வு முகாம்
கம்பம்: கம்பத்தில் கல்லூரி மாணவிகளுக்கு வருமான வரி பற்றிய விழிப்புணர்வு முகாமை தேனி வருமான வரித் துறை நடத்தியது.
தேனி வருமானவரி அதிகாரி ஆனந்தகுமார் கல்லூரி மாணவிகளுக்கு வருமான வரி பற்றியும், முன்கூட்டியே வருமான வரி செலுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து வியாபாரிகளுக்கு விளக்கினார்.
மதுரை வருமானவரி உதவி ஆணையர் அம்பேத்கர் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் பாலசுப்ரமணியன் (மதுரை ), ராமகிருஷ்ணன் (தேனி) ஆகியோர் பங்கேற்றனர்.