கலெக்டர் அலுவலகத்தில் தந்தை மனு : பூஜாரி நாகமுத்து வழக்கில் மேல் முறையீடு செய்ய வேண்டும்
தேனி: பெரியகுளத்தில் கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்ட பூஜாரி நாகமுத்து வழக்கில் மேல் முறையீடு செய்ய கோரி அவரின் தந்தை சுப்புராஜ் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.பெரியகுளம் டி.கள்ளிபட்டியை சேர்ந்தவர் நாகமுத்து 22. இவர் கைலாசப்பட்டி கைலாசநாதர் கோயில் பூஜாரியாக இருந்தார். கோயில் கடை ஒதுக்குவது தொடர்பாக இவருக்கும் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ.ராஜாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில் 2012 டிச.,ல் நாகமுத்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் ராஜா உட்பட 7 பேர் மீது வழக்கு விசாரணை திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கில் தொடர்புடைய தென்கரை பேரூராட்சி முன்னாள் தலைவர் பாண்டி இறந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு கடந்தமாதம் வெளியானது. இதில் ஓ.ராஜா உட்பட 6 பேர் விடுதலை செய்யப்பட்டனர்
இந்நிலையில் பூஜாரி நாகமுத்துவின் தந்தை சுப்புராஜ் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தார்.
மனுவில், ‘குற்றவாளிகள் விடுதலையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல் முறையீடு செய்ய வேண்டும்’. என்றிருந்தது.