ஏலக்காய் பயிருக்கு காப்பீட்டு திட்டம்
போடி: மத்திய அரசு நிறுவனமான இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் மூலம் ஏலக்காய் பயிருக்கு காப்பீட்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இந்தியா வேளாண்மை காப்பீட்டு நிறுவனத்தில் வானிலை பயிர் காப்பீட்டு திட்டத்தில் விண்ணப்பிக்க அறிவுருத்தியுள்ளது. இதில் ஏக்கருக்கு ரூ.ஆயிரம் கட்டணமாக செலுத்த வேண்டும். தாலுகா அளவில் மழை, வெப்பநிலை பொறுத்து ஏதேனும் மாற்றம் இருப்பின் இழப்பீடு தொகையாக ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்.
மகசூல், பூச்சிகளால், வேறு ஏதேனும் காரணங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தனிப்பட்ட முறையில் இழப்பீடு வழங்கப்படுவது இல்லை.
இத்திட்டத்தில் சேர விவசாயிகள் தங்களது ஆதார், வங்கி கணக்கு, நாமினி ஆதார், சிட்டா, அடங்கல், அலைபேசி எண்ணை இணைத்து போடி தோட்டக்கலை அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என தோட்டக்கலை உதவி இயக்குனர் ராஜமுருகன் தெரிவித்து உள்ளார்.
