கனிம திருட்டில் ஈடுபட்ட லாரி பறிமுதல்
பெரியகுளம் : பெரியகுளம் சப்-கலெக்டர் ரஜத்பீடன் மாவட்ட நீதிமன்றம் பகுதியில் கனிமவளத்திருட்டை கண்டறிய ரோந்து சென்றார். ‘டிஎன்.13 பி 1999’ பதிவெண் கொண்ட எம்.சாண்ட் மண் ஏற்றிச்சென்ற டிப்பர் லாரியை நிறுத்தி டிரைவரிடம் ஆவணங்களை சோதனையிட்டார்.
இதில் அனுமதி சீட்டில் உபயோகித்த நேரத்தை திருத்தி, அதனை உண்மையானதாக பயன்படுத்தி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி கனிமவள திருட்டியது தெரியவந்தது. விசாரணையின் போது டிரைவர் தப்பினார். தாமரைக்குளம் வி.ஏ.ஓ., கற்பகவள்ளி புகாரில் டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.