கஞ்சா பதுக்கிய பள்ளி மாணவர்களுக்கு விற்க இருவர் கைது
தேவதானப்பட்டி: கெங்குவார்பட்டியில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய பதுக்கிய பெண் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
தேவதானப்பட்டி அருகே புஷ்பராணி நகர் பகுதியில் எஸ்.ஐ., ஜான்செல்லத்துரை மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது டி.காமக்காபட்டி முத்தாலம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த காமேஷ்வரனிடம் 29. போலீசார் விசாரணை செய்யும் போது, உடனிருந்த கெங்குவார்பட்டி ரஞ்சித் 29. ஓடினார்.
போலீசார் காமேஷ்வரனை சோதனையிட்டதில் அவரது இடுப்பில் மறைத்து வைத்திருந்த 60 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர்.
விசாரணையில் காமேஷ்வரன் கெங்குவார்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த தினகரன் மனைவி வனசுந்தரியிடம் 45. கஞ்சா வாங்கியதாக தெரிவித்தார்.
வனசுந்தரி வீட்டில் சோதனையில் போலீசார் 50 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர்.
இவர்கள் கெங்குவார்பட்டி பள்ளி மாணவர்கள் சிலருக்கு கஞ்சா விற்பனை செய்ய பதுக்கியது தெரிய வந்தது.
போலீசார் வனசுந்தரி, காமேஷ்வரனை கைது செய்து, கஞ்சா விற்ற ரூ.1,200 பணத்தை கைப்பற்றினர். தப்பி ஓடிய ரஞ்சித்தை தேடி வருகின்றனர்.