ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் : சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி
தேனி : தேனி மாவட்டம் போடி அருகே 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி முனியாண்டி, 57, தனியார் பள்ளி ஆசிரியர் பகவதிராஜ், 56, ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சிறுமி புகாரின்படி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிஷா, சிறப்பு எஸ்.ஐ., லதா ஆகியோர் 2023 மே 26ல், விபத்தில் இறந்த ராமகிருஷ்ணன் தவிர ஆசிரியர் பகவதிராஜ், தொழிலாளி முனியாண்டியை கைது செய்தனர்.
இவ்வழக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் அமுதா ஆஜரானார். முனியாண்டி, பகவதிராஜ் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை, ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
சிறுமிக்கு இழப்பீடாக அரசு ரூ.8 லட்சத்தை அபராதத்துடன் சேர்த்து ரூ.10 லட்சமாக வழங்க வேண்டும். சிறுமிக்கு ரூ.2 லட்சம் கல்வி, மருத்துவம் செலவினங்களுக்கும், மீதியுள்ள தொகை வங்கியில் சிறுமியின் பெயரில் வைப்புத் தொகையாக செலுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.