அறிவியல் கண்காட்சி.
உத்தம பாளையும்: உத்தமபாளையம் அல்ஹிக்மா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்களின் கண்டுபிடிப்புக்களை காட்சிப்படுத்தியிருந்தனர்,
இப் பள்ளியில் நடந்த கண்காட்சிக்கு பள்ளி செயலர் முகமது சைபூல் இஸ்லாம் தலைமை வகித்தார்.
கருத்தராவுத்தர் கல்லூரி முன்னாள் முதல்வர் ஹௌது முகைதீன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் நூருல் ஷிபா வரவேற்றார். கம்பம் ஆதி சுஞ்சனகிரி பெண்கள் கல்லூரி முதல்வர் ரேணுகா கண்காட்சியை துவக்கி வைத்தார். சென்னை ட்ரோன் போலீஸ் அமைப்பின் பைலட் சையத் ராயன் பங்கேற்று கண்காட்சியில் இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் ட்ரோன் பங்கு, அதன் முக்கியத்துவம், அனைத்து துறைகளுக்கும் ட்ரோன் தேவைப்படும் நிலை பற்றி விளக்கினார்.
ட்ரோன் பயன்பாடு குறித்து மாணவ மாணவிகளின் கேள்விகளுக்கு எளிய முறையில் விளக்கமளித்து, ட்ரோன் ஒன்றை இயக்கி காட்டினார். கண்காட்சியில் காற்றாலை மின்சார இயந்திரம், மனித உடலில் உள் உறுப்புக்கள் அமைப்பு மற்றும் அவைகள் செயல்படும் விதம், ரோபோக்கள், பாரியின் தேர், தீ, மழை வெள்ள காலங்களில் அலாரம் உள்ளிட்ட பல்வேறு கண்டுபிடிப்புக்களை காட்சிப்படுத்தியிருந்தனர். சிறந்த படைப்புக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.