காங்கிரசார் உண்ணாவிரதம் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து,
கம்பம், டிச. 11: தேனி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக மணிப்பூரில் நடைபெறும் கலவரத்தை கண்டித்து கம்பம் பார்க் திடலில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தேனி மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார், கம்பம் நகர தலைவர் போஸ் வரவேற்பு நிகழ்த்தினார். சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ராஜா முகமது, மாநில பொதுக்குழு உறுப்பினர் பாரதன், கம்பம் வட்டார தலைவர் அன்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பேச்சாளர் சிவமணி உண்ணாவிரதத்தை துவக்கி வைத்து பேசினார், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் கிருஷ்ணவேணி, பாரதன், கருப்பத்தேவர், நகர மன்ற உறுப்பினர் சர்புதீன்,கணேசன்,நாகராஜ், புலிகுத்தி ஜீவா, சாட்டை சாதிக்,கதிர்,சிந்தன், கவிதர்,நவநீதன்,கோபால், வடமலை,மாஸ்டர் மணி, இம்மானுவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.