ஜன.31 முதல் தொழுநோய் விழிப்புணர்வு முகாம்
தேனி: தேசிய தொழுநோய் ஒழிப்பு தினம் ஜன.30ல் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு மாவட்டத்தில் ஜன.31 முதல் பிப்.15 வரை தொழுநோய் வழிப்புணர்வு முகாம் நடக்கிறது.
இதில் வட்டாரம் வாரியாக வீடுகள் தோறும் தொழுநோய் கண்டறியும் பணிகள் நடக்க உள்ளது
மேலும் எம்.சுப்புலாபுரம், தேவதானப்பட்டி, கூடலுார் ஆகிய வட்டாரங்களில் தன்னார்வலர்கள் மூலம் கணக்கெடுப்புப் பணி பிப்.13ல் மேற்கொள்ளப்பட உள்ளது.
மாவட்டத்தில் தொழுநோய் இல்லை என்ற நிலை ஏற்படுத்த பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என, கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.