கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்த அலுவலர்கள்
தேனி: சி.பி.எஸ்.,(பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்) ஒழிப்பு இயக்கம் ஓய்வூதியம் தொடர்பாக அமைக்கப்பட்ட அலுவலர் குழுவை திரும்ப பெற வேண்டும், தேர்த்ல வாக்குறுதிபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி அரசு ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிவாக அறிவிக்கப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம், தோட்டக்கலைத்துறை அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பொதுப்பணித்துறை அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்தனர். சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில இணை ஒருங்கிணைப்பாளர் முகமது ஆசிக் வீரபாண்டியில் உள்ள நீர்வளத்துறை அலுவலக வளாகத்தில் நடந்த விளக்க கூட்டத்தில் சங்கத்தினரிடம் கோரிக்கைகள் பற்றி விளக்கினார்.