வாக்காளர் விழிப்புணர்வு கல்லுாரியில்
பெரியகுளம்: ‘கல்லுாரி மாணவிகளான இளம் வாக்காளர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் இணைந்தும், மற்றவர்களை இணைப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.’ என, பெரியகுளம் சப்-கலெக்டர் ரஜத்பீடன் தெரிவித்தார்.
பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லுாரியில் வாக்காளர்கள் விழிப்புணர்வு விழா சப்-கலெக்டர் ரஜத்பீடன் தலைமையில் நடந்தது. தாசில்தார் மருதுபாண்டி, மண்டல துணை தாசில்தார் சதீஷ் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் சேசுராணி, செயலர் சாந்தாமேரி ஜோஷிற்றா, துணை முதல்வர் கீதாஅந்துவானந்த் வரவேற்றனர்.
சப்கலெக்டர் பேசுகையில், ‘இளம் வாக்காளர்கள் பட்டியலில் மாணவிகள் சேர்ந்தும், மற்றவர்களை சேர்த்தும், தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் ஓட்டளிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.’, என்றார்.
பேச்சுப் போட்டியில் ஏராளமான மாணவிகள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு புத்தகம் வழங்கி சப்கலெக்டர் பாராட்டினார்.