Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

கரூர் பெண் கைது : ரூ.72.25 லட்சம் மோசடி

தேனி:தேனி மாவட்டம் கூடலுாரில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.72.25 லட்சம்மோசடி செய்த 5 பேர் மீது வழக்குப்பதிந்த குற்றப்பிரிவு போலீசார் கரூரை சேர்ந்த பூமகள் 46, என்பவரை கைது செய்தனர்.

கம்பம் அருகே மேலக்கூடலுார் இன்ஜினியரிங் பட்டதாரி பிரபு 27. இவரது நண்பர் சந்திரசேகரன் மின்வாரிய ஒயர்மேன். இவர் 2021 டிச., பிரபுவை சந்தித்தார்.

அப்போது கரூர் மாவட்டம் வெண்ண மலை குமார், கோவை நடுப்பாளையம் உஷாராணி, சின்ன காஞ்சிபுரம் அண்ணாநகர் கவுரிசங்கர் ஆகிய மூவரை தனக்கு தெரியும், அவர்கள் பலருக்கு அரசுப்பணி வாங்கித்தந்துள்ளனர் என ஆசை வார்த்தை கூறினார்.

பின் சந்திரகேரன், அந்த மூவரையும், பிரபு, தேனி மாவட்டத்தை சேர்த்த கார்த்திகேயன், பிரதீப்குமார், தினேஷ்குமார்,ஆனந்த் ஆகிய ஐந்து பேரிடம் அறிமுகம் செய்து வைத்தார்.

அவர்கள், பிரபுவிற்கு நீர்வளத்துறையில்உதவிப் பொறியாளர் வேலை வாங்கித்தர ரூ.30 லட்சம் கேட்டனர்.

இதனை நம்பிய பிரபு, குமாரின் மனைவி பூமகள், உஷாராணி, கவுரிசங்கர் ஆகியோரின் வங்கிக் கணக்குகளிலும், ரொக்கமாகவும் ரூ.19.75 லட்சத்தை பல தவணைகளாக வழங்கினார்.

அதன்பின் பணி நியமன ஆணை பெற்ற பிரபுவிற்கு அது போலியானது என தெரிந்தது.

இதேபோல் கார்த்திகேயன், பிரதீப்குமார், தினேஷ்குமார், ஆனந்த் ஆகிய நால்வரிடம் ரூ.52.50 லட்சம் பெற்றனர். மொத்தம் பிரபு உட்பட ஐவரிடம் ரூ.72.25 லட்சம் பெற்று, வேலைவாங்கித் தராமல் மோசடி செய்தனர்.

இதையடுத்து பிரபு தேனி முன்னாள் எஸ்.பி., பிரவின்உமேஷ்டோங்க்ரேவிடம் புகார் அளித்தார்.

அவரது உத்தரவில் குற்றப்பிரிவு போலீசார் 2023 செப்.9ல் சந்திரசேகரன், குமார், அவரதுமனைவி பூமகள், உஷாராணி, கவுரிசங்கர் ஆகிய ஐவர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்தனர்.இதில் பூமகளை நேற்று இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி, எஸ்.ஐ., பாஸ்கரன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *