ஊராட்சிகளில் குடியரசு தின கிராம சபை கூட்டம்
தேனி : குடியரசு தினவிழாவை முன்னிட்டு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் தனி அலுவலர்கள், அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது.
தேனி ஒன்றியம் கொடுவிலார்பட்டியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்தார்.
டி.ஆர்.ஓ. ஜெயபாரதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனீப் முன்னிலை வகித்தார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 4 மனுக்கள் வழங்கப்பட்டன.
தாசில்தார் சதீஸ்குமார், ஊராட்சிகள் உதவி இயக்குனர் பழனிவேல், பி.டி.ஓ., மைதிலி உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். ஊராட்சி செயலாளர் வேல்முருகன் கூட்டத்தை ஒருங்கிணைத்தார்.
அரண்மனைப்புதுார் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஒன்றிய பொறியாளர் பிரகதீஸ்வரன் தலைமை வகித்தார். முல்லை நகர் பகுதியில் குப்பை தொட்டி வைக்க வேண்டும், வசந்தம் நகரில் போதிய தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
ஊராட்சி செயலாளர் பாண்டி கூட்டத்தை ஒருங்கிணைத்திருந்தார்.
ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் முல்லைநகரில் நடந்த விருந்தில் பொது மக்களுடன் கலெக்டர் பங்கேற்றார்.