மாவட்ட தொழுநோய் மருத்துவப் பணிகள் துணை இயக்குனர் தகவல் தொழுநோய் ஆரம்ப அறிகுறி தெரிந்தவுடன் சிகிச்சை பெற்றால் பாதிப்பை தவிர்க்கலாம்
தேனி; ஆரம்ப நிலை அறிகுறிகளை கண்டறிவதால் மட்டுமே தொழுநோய் பாதிப்பை முற்றிலும் தவிர்க்க இயலும். பொது மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.’ என தேனி மாவட்ட தொழுநோய் மருத்துவப்பணிகள் துணை இயக்குனர் ரூபன்ராஜ் தெரிவித்தார்.
பெரியகுளம் மாவட்ட மருத்துவமனைவளாகத்தில் தொழு நோய் மருத்துவப் பணி துணை இயக்குனர் அலுவலகம் செயல்படுகிறது. இங்கு துணை இயக்குனர் என்.எம்.எஸ்., மருத்துவம் சாராத மேற்பார்வையாளர்கள் உட்பட 6 பேர் பணியில் உள்ளனர். வட்டாரஅளவில் தொழு நோய் நல கல்வியாளர்கள் பணிபுரிகின்றனர்.
தினமலர் நாளிதழ் அன்புடன் அதிகாரி பகுதிக்காக துணை இயக்குனர் ரூபன்ராஜ் பேசியதாவது:
தொழுநோய் என்றால் என்ன
மனித உடலில் தோல் பகுதியில் வேர்வை சுரப்பிகளை சுற்றிப்படரும் ஒரு பாக்டீரியா கிருமி மூலம் ஏற்படக்கூடிய ஒரு தோல் பாதிப்புதான் தொழுநோய். இதனால் பாதித்த தோல்பகுதி வெளிரிய வெண்மை நிறமாக மாறி அப்பகுதியில் மெலனின் என சுரப்பியை பாக்டீரியா கிருமி அளித்து விடுவதால் உணர்ச்சி இருக்காது. உடலில்தேமல் போன்று வெளிரிய வெண்மை நிறத்தில் தோல் பகுதி மாறிடும். இப்பகுதியைத்தான்
தேமல் எனஅழைக்கின்றனர். இப்பாதிப்பு ஏற்பட்டவரின் சுவாசம் மற்றும் தும்மல் மூலம் காற்றில் கலந்துவிடும்நுண்கிருமிகள் பிறர் சுவாசிப்பது மூலம் வெகு சுலபமாக அடுத்தவருக்கும் பரவிவிடும்.
இதில் வினோதமான செயல்பாடு என்னவெனில் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் 90 சதவீதத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு, அனிச்சை செயலாக அந்த பாக்டீரியா கிருமிகள் உள்ளே செல்ல முடியாது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களையும் ஆரம்ப நிலை அறிகுறிகளை கண்டறிந்து, சிகிச்சைஅளித்தால் 6 மாதங்களில் முழுமையாக குணப்படுத்தி விடலாம். இதனால் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.
இந்நோய் பாதிப்பை எவ்வாறு கண்டறிவது
இந்நோய் காற்றில் பரவக்கூடியது, சாதாரண தேமல் போன்று முதற்கட்டமாக தோலில் தோன்றும். அந்தஇடங்களில் முடி வளராமல் இருக்கும். உடலில் உள்ள பிற இடங்களில் உள்ள உணர்ச்சிகள் போல்தேமல் தோன்றிய இடங்களில் இருக்காது. அரிப்பு ஏற்படாது. இது போன்ற அறிகுறிகளை வைத்துதொழுநோய் பரவிவருவதை கண்டறியலாம். இப்பிரச்னை ஏற்பட்டால் தாமதம் இன்றி தோல்சிகிச்சை டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றால் நரம்பு பகுதியில் பாதிப்புஏற்பட்டு முடக்குவாதம் வருவதை தவிர்க்கலாம்.
தேனி மாவட்டத்தில் தொழு நோய் பரவுகிறதா
தேனி மாவட்டத்தில் பரவுவது குறைவதுதான். 2023 – – 2024ல் ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 35 புதியதொழு நோய் பாதிப்படைந்தவர்களை கண்டறிந்துள்ளோம். அவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, பாதிக்கப்பட்டவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சிகிச்சை அளிக்கிறோம். மேலும்165 பேர் ஊனமுற்ற நிலையில் பாதிப்படைந்து ஆதரவற்ற நிலையில் மாதந்தோறும் அரசின் உதவித்தொகை ரூ.2000 பெற்று வருகின்றனர்.
தொழு நோய் தடுப்பு திட்டம், விழிப்புணர்வு நடவடிக்கைகள் பற்றி
தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டம் பயன்பாட்டில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளில் மக்கள் கூடும் பொது இடங்களில் விழிப்புணர்வு முகாம்கள் அமைக்கப்பட்டுநலக்கல்வியாளர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அடிக்கடி வீடு, வீடாகசென்று விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள்
வழங்குதல், பரிசோதனைகளும் நடத்தி வருகிறோம். ஆரம்ப நிலையில் நோயை கண்டறிந்தால் 6 மாதங்களில் மாத்திரைகள் மட்டும் வழங்கி, ஊசி மருந்து இன்றி குணப்படுத்தி விடலாம் என்பதால் இத்திட்டம் பயன்பாட்டில் உள்ளது.
கூடுதலாக 2027 தொழு நோய் இல்லாத இந்தியா உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில்தீவிர கண்காணிப்பு நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தேனி மாவட்டத்தில்இணை இயக்குனர் அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பில் தொடர் கண்காணிப்பு பணிகளும்நடத்தப்படுகின்றன. பிப்.13 முதல் தேவதானப்பட்டி, கூடலுார், எம்.சுப்புலாபுரம் வட்டாரங்களில் வீடு வீடாக கண்காணிப்பு பணிகள் நல கல்வியாளர்கள், தொழு நோய் இணை இயக்குனர் அலுவலகபணியாளர்கள் மூலம் நடக்க உள்ளது.
ஊனமுற்று பாதித்தவர்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறதா
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதில் பாதிப்பின் அளவை குறைக்க சிகிச்சைஅளிக்கிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவைப்படும் உபகரணங்களையும் வழங்கி வருகிறோம்.
பாதிப்பு அதிகமுள்ள பகுதி கண்டறியப்பட்டுள்ளதா
அவ்வாறு கண்டறியப்படவில்லை. மாவட்டத்தில் மொத்தம் 35 தொழுநோயாளிகள் உள்ளனர். இந்தியாவில் அதிக பாதிப்பு ஏற்பட்டு எண்டமிக் நிலை ஏற்பட்டுள்ளமாநிலங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் பீஹார். உத்தரபிரதேசம், மகாராஷ்டிராஉள்ளிட்ட வட மாநிலங்கள் அடங்கும். மாவட்டத்தில் அம்மாநில தொழிலாளர்கள் பணி செய்யும் பகுதிகளை கண்டறிந்து, பாதிப்பு கண்டறிந்தால் கண்காணித்து சிகிச்சை அளிக்கிறோம்
அப்பகுதியில் விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்கிறோம். பொது மக்கள் ஆரம்பஅறிகுறிகள் தெரிந்த உடனடியாக தோல் நோய் சிகிச்சை டாக்டரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொண்டால் பின் வரும் பாதிப்பை தவிர்க்கலாம்., என்றார்.