ஆம்னி பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
கம்பம் : கம்பத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, புதுச்சேரி ஆகிய ஊர்களுக்கு 50 க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் தினமும் சென்று வருகிறது.
ஆம்னி பஸ்கள் நிறுத்துமிடம் இல்லாததால் மெயின் ரோட்டில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதை நிவர்த்தி செய்ய நகராட்சி சார்பில் ரூ.2.65 கோடியில் ஆம்னி பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் கடந்த மாதம் துவங்கியது.
நகராட்சி பஸ் ஸ்டாண்ட் கட்டி பல ஆண்டுகளாகி விட்டதால் ரூ.1.75 கோடியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இப் பணிகளின் தரம் குறித்து நேற்று முன்தினம் கலெக்டர் ஷஜீவனா ஆய்வு செய்தார்.
அவருடன் நகராட்சி தலைவர் வனிதா, கமிஷனர் பார்கவி, பொறியாளர் அய்யனார், உதவி பொறியாளர் சந்தோஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர். இருஇடங்களிலும் ஆய்வு செய்து விளக்கங்கள் கேட்டார். பொறியாளர்கள் விளக்கி கூறினர்.
கலெக்டர் கூறிய ஆலோசனைகளையும் மேற்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.