ரோட்டோர கடைகளால் விபத்து அபாயம்
கூடலுார் : கூடலுாரில் இருந்து குமுளி, கம்பம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் சபரிமலை சீசனுக்காக பல தற்காலிக கடைகள் துவக்கப்பட்டுள்ளன. வாகனங்களை ரோட்டோரத்தில் நிறுத்திவிட்டு பொருட்கள் வாங்குவதுடன் அப்பகுதியிலேயே நீண்ட நேரம் முகாமிட்டுள்ளனர்.
தற்போது சபரிமலை சீசனுக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் வந்த வண்ணம் உள்ளது.
ரோட்டோர கடைகள் முன்பு நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம் உள்ளது. சபரிமலை சீசன் முடியும் வரை நெடுஞ்சாலையில் வாகனங்களை நிறுத்தாமல் தடுக்க நெடுஞ்சாலைத்துறை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.