வீரபாண்டியில் ஆன்மிக புத்தக விற்பனை மையம்
தேனி : வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் வளாகத்தில் ஆன்மிக புத்தகங்கள் விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலில் நுழைவாயில் உள்ள மண்டபத்தில் நகரும் ஆன்மிக புத்தக நிலையத்தில் ரூ.30 முதல் ரூ.1750 விலையில் பல்வேறு தலைப்புகளில் இலக்கிய, திருக்கோயில்கள் ஹிந்து கடவுள்கள் தோன்றிய வரலாறுகள் அடங்கிய புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளன. இதில் தேவாரம் முதல் திருமுறையில் இருந்து ஏழாம் திருமுறை வரையிலான புத்தகங்கள், புராண நீதிக்கதைகள், சைவ சமய கதை களஞ்சியம் தொகுதி 1 முதல் 7 நுால்கள், திருமுருகாற்றுப்படை (ஆங்கிலப்பதிப்பு நுால்), திருப்பாடல் திரட்டு, கந்தபுராணக்கதை, திருப்பரங்குன்றம் கதை (ஆங்கிலப்பதிப்பு), வள்ளலார் வரலாற்று வினாடி வினா, கம்பர் வரலாறு, சிவபுரி, திருக்கன்டியூர் புராண நுால்கள், திருமயிலை திருப்புகழ் அகத்தியர் இரணநுால், திருத்தொண்டர் வரலாறு, கவுமாரியம்மன் வராறு, தமிழக கலைகள் உள்ளிட்ட தலைப்புகளில் பல்வேறு நுால்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. மேலும் ஹிந்து சமய அறநிலையத்துறையால் அச்சடிக்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள 28 கோயில்களின் விபரங்கள் குறித்த நுால் விற்பனைக்கு உள்ளது. இப்புத்தகங்களை கோயிலுக்கு வரும் பக்தர்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றன