ரூ. 55 லட்சம் கோரி கடிதம் கைவிடப்பட்ட குவாரிகளில் வேலி அமைக்க
தேனி, : பயன்பாட்டில் இல்லாத 8 குவாரிகளுக்கு வேலி அமைக்க ரூ.55.30 லட்சம் கேட்டு அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக கனிமவளத்ததுறையினர் தெரிவித்தனர்.
மாவட்டத்தில் ஆண்டிபட்டி தாலுகாவில் கோவில்பட்டியில் 5, சண்முகசுந்தரபுரத்தில் 3 என மொத்தம் 8 குவாரிகள் பயன்பாட்டில் இல்லாத கைவிடப்பட்ட குவாரிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மழைகாலங்களில் தேங்கும் நீரில் குளிப்பது, நீச்சல் பழகுவது என மாணவர்கள் இறப்பது தொடர்ந்தது. யாரும் உள்ளே செல்லாதவகையில் வேலி அமைக்க மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கும், குவாரியில் தேங்கும் நீரை பயன்படுத்தும் வண்ணம் நடவடிக்கை எடுக்க குடிநீர் வடிகால் வாரியத்திற்கும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
இந்த 8 குவாரிகளில் சுற்றி வேலி அமைக்க ரூ.55.30 லட்சம் செலவாகும் என கனிம வளத்துறையினரால் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.வேலி அமைப்பதற்காக தொகையை ஒதுக்கீடு செய்ய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக கனிமவளத்துறையினர் தெரிவித்தனர்.