Wednesday, April 16, 2025
மாவட்ட செய்திகள்

சுருளி அருவியில் மியூசியம் அமைக்க வனத்துறை ஏற்பாடு

கம்பம்: சுருளி அருவியில் யானை, காட்டு மாடுகள் உள்ளிட்ட பல வன உயிரினங்களின் ராட்சத பொம்மைகள் அடங்கிய மியூசியம் ஒன்றை ஏற்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பில் வனங்கள், அதில் வாழும் வன உயிரினங்களும் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால் வனங்கள் மற்றும் வன உயிரினங்களின் முக்கியத்துவம் பற்றி பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. வனமும் வன உயிரினங்களும் ஒன்றொடொன்று தொடர்புடையது. எனவே, வனமும் அதில் வாழும் வன உயிரினங்களும் இந்த பூமியின் சுற்றுப் புறச் சூழல் நன்றாக இருக்க வேண்டியது அவசியம்.

எனவே சுருளி அருவியில் வனம் மற்றும் அதில் வாழும் வன உயிரினங்களின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் மியூசியம் ஒன்று அமைக்க மேகமலை புலிகள் காப்பக அதிகாரிகள் முடிவு செய்தன

அதன்படி நேற்று யானை , காட்டு மாடு ஆகியவற்றின் ஆளுயர பொம்மைகள் அருவி பகுதிக்கு கொண்டு வரப்பட்டது.

இது தொடர்பாக ரேஞ்சர் பிச்சை மணி கூறுகையில், சுருளி அருவியில் பொதுமக்கள் ரசிக்கவும், அதே சமயம் வன உயிரினங்கள் இந்த பிரபஞ்சத்திற்கு எவ்வளவு அவசியம் என்பதை தெரிவிக்கும் வகையில் மியூசியம் அமைக்க உள்ளோம். முதற்கட்டமாக யானை, காட்டு மாடு பொம்மைகள் வந்துள்ளன.

விரையில் பிற உயிரினங்களின் பொம்மைகளும் வர உள்ளது. இதற்கான திறப்பு விழா விரைவில் நடக்கும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *