தமிழக அரசின் ‘டிரேடு லைெசன்ஸ்’ திரும்ப பெறு வர்த்தக சங்கம் மனு
சின்னமனூர்,: சின்னமனூர் வர்த்தக சங்கம் சார்பில் தமிழக அரசு அறிமுகம் செய்துள்ள டிரேடு லைசென்ஸ் வரியை ரத்து செய்ய கோரி நகராட்சி கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளது.
சின்னமனூர் வர்த்தக சங்க அவசர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வர்த்தக சங்க தலைவர் உதயகுமார் தலைமை வகித்தார். மாநில வர்த்தக சங்க பேரமைப்பின் துணை தலைவர் பெருமாள், மாநில இணை செயலாளர் காளிமுத்து, முன்னிலை வகித்தனர். வர்த்தக சங்க செயலாளர் தாமோதரன், கவுரவ தலைவர் சிவகாமிநாதன் வரவேற்றனர்.
கூட்டத்தில் வீட்டு வரி மற்றும் தொழில்வரி கடுமையாக உயர்த்தியதால் வியாபாரிகள் துன்பத்தில் உள்ளனர். தொழில் நடத்துவதற்கு தொழில் வரி கட்டி வருகின்றோம். தற்போது டிரேடு லைசென்ஸ் பெற வேண்டும் என்பது வேதனையாக உள்ளது. உடனடியாக டிரேடு லைசென்ஸ் பெறும் உத்தரவை ரத்து செய்வதுடன் விதிக்கப்பட்டுள்ள வரியை குறைக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்த மனுவை வர்த்தக சங்கத்தினர், சின்னமனூர் நகராட்சி கமிஷனர் கோபிநாத்திடம் வழங்கினார்கள். வர்த்தக சங்க நிர்வாகிகளுடன் நகை கடை , பலசரக்கு , மிட்டாய் கடை, நுகர்பொருள் விநியோகங்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகளும் பங்கேற்றனர்.