பாலிதீனை தடுக்க பெண்கள் பறக்கும் படை
சபரிமலை: சபரிமலை பாதைகள் முழுக்க காட்டுக்குள்ளயே அமைந்துள்ளது. பக்தர்கள் வாகனங்களில் வரும் போது துாக்கி வீசும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், பாலிதீன் கவர்களால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. காடுகளில் வசிக்கும் விலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
எனவே இது போன்ற பொருட்களை அப்புறப்படுத்தவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பெண்களை மட்டும் உள்ளடக்கிய பறக்கும்படையை உள்ளாட்சித்துறை, மாவட்ட துாய்மை மிஷனும் இணைந்து அமைத்துள்ளது.
பந்தளம் முதல் வடசேரிக்கரை வரையிலும் அங்கிருந்து பம்பை வரையிலான காட்டுப் பாதைகளிலும் பக்தர்கள் தங்குமிடங்களில் இந்த பறக்கும் படையினர் சோதனை நடத்தி பாலிதீன் பொருட்களை பறிமுதல் செய்கின்றனர். வனத்துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ள ஊழியர்கள் பாலிதீன் பைகளை சேகரித்து அழிப்பதற்காக அனுப்பி வைக்கின்றனர். இதன் தலைவராக குளநடை பஞ்சாயத்து செயலாளர் அம்பிகா நியமிக்கப்பட்டுள்ளார்.