பெரியாறு அணை நீர்மட்டம் மழையின்றி குறையுது -நீர் திறப்பை குறைக்க வலியுறுத்தல்
கூடலுார்: ‘மழையின்றி முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் குறைந்து வருவதால் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு 2ம் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்க நீர் திறப்பை குறைக்க வேண்டும்,’ என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த அணை நீரை நம்பி கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் இரு போக நெல் சாகுபடி நிலங்கள் உள்ளன. தற்போது 2ம் போக நெல் சாகுபடி நடக்கிறது.
இன்னும் 2 மாதங்களுக்கு மேல் தண்ணீர் தேவையாக உள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 128 அடியாக குறைந்துள்ளது(மொத்த உயரம் 152 அடி). அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பதிவாகவில்லை. இதனால் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைய வாய்ப்புள்ளது.
அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 362 கன அடியாக உள்ளது. தமிழகப்பகுதிக்கு குடிநீர், சாகுபடிக்காக 1100 கன அடி திறக்கப்பட்டுள்ளது. நேற்று பகல் முழுவதும் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் கடும் வெப்பம் நிலவியது.
நீர் இருப்பை உறுதி செய்ய வேண்டும்
விவசாயிகள் கூறியதாவது: அணையில் இருந்து 500 முதல் 600 கன அடி வரை தமிழகப்பகுதிக்கு திறந்து விட்டாலே சாகுபடிக்கும் குடிநீர் தேவைக்கும் போதுமானதாகும். ஆனால் தொடர்ந்து பல நாட்கள் 1100 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
ஏற்கனவே தேனி மாவட்டத்தில் உள்ள வைகை, மஞ்சளாறு, சோத்துப்பாறை, சண்முகாநதி அணைகளில் நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளது.
இச்சூழ்நிலையில் இரண்டாம் போக நெல் சாகுபடியை முழுமையாக செய்யும் வகையில் நீர் திறப்பை குறைத்து, அணையில் நீர் இருப்பை உறுதி செய்ய வேண்டும் என்றன