சுருளி அருவியில் நான்காவது நாளாக குளிக்க தடை நீடிப்பு
கம்பம்: சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு குறையாததால், நான்காவது நாளாக அருவியில் குளிக்க தடை தொடர்கிறது.
சுருளி அருவியில் குளிக்க தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். சபரிமலை சீசன் என்பதால் கூட்டம் அதிகம் இருக்கும். அக்.,நவம்பரில் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும். அப்போது குளிக்க தடை விதிப்பதும், பின் ஒரிரு நாட்களில் வெள்ளம் குறைந்து குளிக்க அனுமதி வழங்குவது வழக்கமாகும்..
இந்தாண்டு டிச., 12ம் தேதி முதல் மழை துவங்கியது. அன்று இரவு பெய்த பலத்த மழை காரணமாக டிச. 13 காலை அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அருவிக்கு செல்லும் படிக்கட்டுகளிலும் வெள்ள நீர் ஓடியது. டிச 13 முதல் பொதுமக்கள் அருவியில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டது.
நேற்று நான்காவது நாளாக அருவியில் வெள்ளப் பெருக்கு குறையாததால், குளிக்க தடை தொடர்வதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
அருவி பகுதிக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.