தொழிற்சங்க வேட்பு மனுத்தாக்கல்
தேனி: தேனியில் உள்ள ஓட்டலில் அ.தி.மு.க., தொழிற்சங்க தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கால் சட்டசபை எதிர்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் தலைமையில் நடந்தது.
நிர்வாகிகள் கூறுகையில், தேனி மாவட்ட அ.தி.மு.க., தொழிற்சங்கம் திண்டுக்கல் மண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. தற்போது தேனி மண்டலம் தனியாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் தலைவர், துணைத்தலைவர், நிர்வாகிகள், அலுவலக பணி உட்பட 12 பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இப்பதவிகளுக்கு கட்சியினர் பலர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். தேர்வானவர்கள் பற்றிய அறிவிப்பு தலைமை கழகத்தில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்றனர்.
இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர்கள் ராமர், ஜக்கையன், உசிலம்பட்டி எம்.எல்.ஏ., மணிமாறன்,தேனி நகர செயலாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்