சிறுத்தையை பார்த்த பக்தர்கள்
மூணாறு: மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான கன்னிமலை எஸ்டேட் டாப் டிவிஷனை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் தம்புரான், சந்தனபாண்டி, கனிராஜ் மற்றும் சிவா ஆகியோர் நேற்று முன்தினம் பெரியவாரை எஸ்டேட் சோலைமலை டிவிஷனில் நடந்த பஜனையில் பங்கேற்று விட்டு ஜீப்பில் இரவு 11:45 மணிக்கு வீடு திரும்பினர்.
கன்னிமலை, லோயர் டிவிஷன் பகுதியில் சென்றபோது ரோட்டின் குறுக்கே கருஞ்சிறுத்தை பாய்ந்து சென்றது. அதனை பார்த்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதே பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு கருஞ்சிறுத்தை நடமாடியதை ஒருவர் பார்த்துள்ளார். சிறுத்தை நடமாட்டத்தால் தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.