ஊராட்சிகளிலும் வாரந்தோறும் அறிக்கை தர உத்தரவு : வரி வசூல் விபரம்
கம்பம் : ஊராட்சிகளிலும் வரி வசூல் விபரங்களை வாரம் ஒரு முறை கலெக்டருக்கு அறிக்கை தர உத்தரவிடப்படள்ளது.
ஒவ்வொரு நிதியாண்டும் உள்ளாட்சி அமைப்புகளில் வரி வசூல் ஆண்டு இறுதியில் துவங்குவார்கள். மார்ச் வரை காலக்கெடு இருக்கும். வீட்டு வரி, குடிநீர் கட்டணம், வாடகை வரி, தொழில்வரி உள்ளிட்ட பல வரியினங்கள் வசூலிக்கப்படுகிறது .
தற்போது ஊராட்சிகளில் வரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. வரி வசூல் விபரங்களை வாரம்தோறும் கலெக்டருக்கு அறிக்கை தர பி.டி.ஓ.. க்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஊரக வளர்ச்சி துறையின் இயக்குநர் வாரந்தோறும் மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி வாயிலாக வரி வசூல் நிலவரம் தொடர்பாக கேட்கிறார்.
ஊராட்சிகளில் வரி வசூலில் காட்டப்படும் கெடுபிடிகளை பார்த்து பொதுமக்கள் அதிருப்தி அடைகின்றனர்.
இது குறித்து ஊராட்சி செயலர்கள் கூறுகையில் , வரி வசூல் செய்வதில் இதுவரை இது போன்ற நெருக்கடி இல்லை. நாங்களும் பொதுமக்களை விரட்டாமல் வசூல் செய்வோம். ஆனால் இந்தாண்டு வரி வசூல் செய்ய நெருக்கடி தரப்படுகிறது. இதுவரை 50 சதவீதம் வரி வசூலாகி உள்ளது என்கின்றனர்.