தேங்கிய மழை நீர் அகற்றம்
ஆண்டிபட்டி: டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஜக்கம்மா கோயில் டி.சுப்புலாபுரம் ஊராட்சி பகுதியை ஒட்டி உள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன் பெய்த மழையால் இப்பகுதியில் தேங்கிய நீரால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. பொது மக்களின் புகாரை தொடர்ந்து ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., மகாராஜன், மாவட்ட கவுன்சிலர் பாண்டியன், பி.டி.ஓ.,ஜெகதீச சந்திரபோஸ், ஊராட்சித் தலைவர் வேல்மணி ஆகியோர் ஏற்பாட்டில் மண் அள்ளும் இயந்திரங்கள் மூலம் தற்காலிக வடிகால் அமைக்கப்பட்டு அப்பகுதியில் தேங்கிய மழை நீர், ஓடை வழியாக வெளியேற்றப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.