பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
ஓய்வு பெற்ற ஆசிரியை கஸ்துாரி தலைமை வகித்தார்.
பள்ளியின் தாளாளர் ஹென்றி அருளானந்தம், நிர்வாகி தமயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளியின் செயலாளர் மாத்யூஜோயல், முதல்வர் உமாமகேஸ்வரி ஆகியோர் கிறிஸ்துமஸ் நிகழ்வு குறித்து பேசினர். மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ் கேக், பரிசுகள் வழங்கப்பட்டன.
விழா ஏற்பாடுகளை ஆசிரியைகள் பூமா, கவிதா, ராகினி, பாண்டிச்செல்வி, திவ்யா உட்பட பலர் செய்திருந்தனர்.