மிருகக்காட்சி சாலையில் ‘மக்காவ் கிளி’ எஸ்கேப்
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள மிருகக்காட்சி சாலையில், சிங்கம், புலி, உட்பட விலங்குகளோடு சேர்த்து, பறவை இனங்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில், தென் அமெரிக்காவைச் சேர்ந்த மக்காவ் வகையைச் சேர்ந்த ஐந்து கிளிகள் வளர்க்கப்பட்டு வந்தன.
இந்த கிளி ஒரு ஜோடி விலை, 4 லட்சம் ரூபாய். அவற்றில் ஒரு கிளி கூண்டிலிருந்து வெளியே பறந்து விட்டது. கூண்டின் கதவை, ஊழியர் சரியாக மூடாததால் கிளி பறந்திருக்கலாம் என தெரிகிறது.
இவ்வகை கிளி, அதிக உயரத்தில் பறக்கக் கூடியது. கிளியை கண்டுபிடிக்க, கால்நடை டாக்டர் நிகேஷ் கிரண் தலைமையில், ஐவர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. போலீஸ் உதவியும் கோரப்பட்டுள்ளது.