தமிழ் இலக்கிய மன்ற போட்டிக்கு அழைப்பு
பெரியகுளம்: தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் திருக்குறள், கவிதை, பேச்சு போட்டிகளில் பங்கேற்க பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பெரியகுளம் தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் போட்டிகள் ஜன. 3ல் துவங்கி ஜன. 5 வரை நடக்கிறது.
இலக்கிய மன்ற அமைப்பாளர் புலவர் ராஜரத்தினம் கூறுகையில்:
பெரியகுளம் என்.எஸ்.என். ரத்தினவேலு சரஸ்வதி திருமண மண்டபத்தில் நடக்கும் போட்டியில் 1330 திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி,
‘ஞாலம் கருதினுங் கைகூடும், வள்ளுவர் காட்டும் வளநாடு, வாய்மை எனப்படுவது எது’ ஆகிய தலைப்புகளில் கட்டுரை போட்டியும், ‘அயர்ச்சியிலா முயற்சி உயர்ச்சி தரும்’ தலைப்பில் கவிதைப்போட்டியும், ‘திருக்குறள் உலகப் பொதுமறையே’ தலைப்பில் பேச்சுப் போட்டியும் நடக்க உள்ளது.
வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசு ரூ.ஆயிரம் முதல் பல பரிசுகள் வழங்கப்பட உள்ளது. போட்டியில் பங்கு பெறுவோர் அந்தந்த கல்வி நிறுவனங்களிடமிருந்து
பரிந்துரை சான்று பெற்று வர
மு.ராஜரத்தினம்,
சர்வோதய சங்க கதர்கடை, மூன்றாந்தல், தென்கரை, பெரியகுளம் என்ற முகவரியில் டிச.31 க்கு பிறகு வரும் போட்டிக்கான பட்டியல் ஏற்றுக்கொள்ள இயலாது.
97882 45428 என்ற அலைபேசி தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என்றார்.