தங்கைக்கு சீர் கொடுத்து திரும்பிய அண்ணன் லாரி மோதி பலி
தேவதானப்பட்டி: பெரியகுளம் அருகே தங்கைக்கு பொங்கல் சீர் கொடுத்து விட்டு, டூவீலரில் வீடு திரும்பிய அண்ணன் விக்னேஷ் குமார் டூவீலர் மீது லாரி மோதிபலியானார்.
பெரியகுளம் ஒன்றியம், புல்லக்காபட்டி டி.வி நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ்குமார் 31. இவரது பெரியப்பா சண்முகம் மகள் ராஜேஸ்வரிக்கு எண்டப்புளி காமாட்சிபுரத்தில் திருமணம் நடந்தது. பொங்கல் சீர் வரிசையை தனது மற்றொரு பெரியப்பா முருகப்பெருமாளுடன் கொடுத்துவிட்டு டூவீலரில் வீடு திரும்பினர். டூவீலரை விக்னேஷ்குமார் ஓட்டினார். பெரியகுளம் திண்டுக்கல் ரோடு வேல்நகர் பகுதியில் சென்ற போது எதிரே வந்த லாரி டூவீலர் மீது மோதியது.
இதில் விக்னேஷ்குமார், பின்னால் உட்கார்ந்து இருந்த முருகப்பெருமாள் காயமடைந்தனர். இருவரும் பெரியகுளம் அரசு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது, விக்னேஷ் குமார் இறந்தார்.
எஸ்.ஐ., முருகப்பெருமாள், விபத்து ஏற்படுத்திய எ.புதுப்பட்டியைச் சேர்ந்த லாரி டிரைவர் முருகபாண்டியை 28. கைது செய்தார்.-