புதுப்பொலிவு பெறும் போலீஸ் ஸ்டேஷன்
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி போலீஸ் ஸ்டேஷன் 1929ம் ஆண்டு துவக்கப்பட்ட காளியம்மன் கோயில் அருகில் செயல்பட்டு வந்தது. இடப்பற்றாக்குறையால் பஸ் ஸ்டாண்ட் அருகே 2 ஏக்கர் பரப்புள்ள இடத்தில் மாற்றம் செய்யப்பட்டது. அப்பகுதியில் 1992ல் போலீசார் குடியிருப்புடன் கூடிய புதிய ஸ்டேஷன் கட்டப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பின் தற்போது ஸ்டேஷனில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வர்ணம் பூசும் பணிகள் நடந்து வருகிறது.
இம்மாத இறுதியில் தேனி எஸ்.பி., ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக திட்டமிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.