சிவில் கார்ப்பரேஷன் பணியாளர் சங்க மாநில செயற்குழு
தேனி: தேனி வீரபாண்டியில் சிவில் கார்ப்பரேஷன் பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் இளவரி தலைமை வகித்தார்
மாநிலத் தலைவர் பழனி, துணைத் தலைவர்கள் வெங்கடேசன், பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர். நுகர்பொருள் வாணிப கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கூட்டுறவுத் துறைக்கு தாரை வார்ப்பதை தவிர்க்க வேண்டும். கணினி இயக்குபவர்களை பணி நிரந்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்ட ஏற்பாடுகளை மாவட்டத் தலைவர் குமரேசன், மண்டலச் செயலாளர் ராஜ்குமார் செய்திருந்தனர்.