மதுரை –போடி அகல ரயில் பாதையில் மின் மயமாக்கல் பணி நிறைவு உறுதி செய்திட சோதனை ஓட்டம்
போடி,; மதுரை — போடி மின் மயமாக்கல் பணி நிறைவு பெற்ற நிலையில் ரயில்வே லைன் மேலே செல்லும் மின் கம்பிகள், உபகரணங்களில் குறைபாடுகளை கண்டறிய ரயில் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது.
மதுரை — போடி இடையே உள்ள ரயில் வழித்தடம் 25 ஆயிரம் வோல்ட் மின் பாதையாக மாற்றப்பட்டு 4 மாதங்களுக்கு முன்பு அகல ரயில் பாதையில் 120 கி.மீ., வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம் நடந்தது
நேற்று மதுரை – போடி இடையே ரயில் செல்லும் வழித்தடத்தில் மேலே செல்லும் மின் இணைப்பு கம்பிகள் சீராக உள்ளதா என்பதை அறியவும், உபகரணங்களில் குறைபாடுகள், ரயில் தாமதத்திற்கான காரணம் கண்டு அறியவும், சீரான மின்சாரம் வழங்கும் பேன்டோகிராப் கொண்டு மின் இணைப்பு பொருத்தப்பட்ட ஓவர் ஹெட் எக்யூப்மென்ட் இன்ஸ்பெக்சன் கார் (OHE INSPECTION CAR) ஆய்வுக்கான ரயில் சோதனை ஓட்டம் நடந்தது
இதோடு மதுரை – போடி வரை ரயில் மின் வழித்தடத்தில் பேன்டோகிராம் கருவி உரசி செல்லும் போது ஏதேனும் தடைகள், மின் கம்பிகளில் தொய்வு உள்ளதா என்பதை அறிந்து சீரமைக்கும் பணி நடந்தது. இது போன்று சில சோதனை ஓட்டங்கள் முடிந்த பின் மின்சார ரயில் இன்ஜின் இறுதி கட்ட சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.